Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ வழங்கும் ‘சிறப்பு ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி : ஆன்லைனில் 7-ம் தேதி நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்துவழங்கும் ‘சிறப்பு ஆளப் பிறந்தோம்’ எனும் ஆன்லைன் வழிகாட்டுநிகழ்ச்சி ஞாயிறு (மார்ச் 7) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சிகளை கடந்த2 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அந்த இலவச பயிற்சியைப் பெறுவதற்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியைப் பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டில் இதேபோன்ற சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்று, தேர்வான எஸ்.கிருஷ்ணபிரியா (Indian Defence Accounts Service, Probationer), சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கலந்து கொண்டு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்க உள்ளனர்

இந்நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பதிவுகட்டணம் கிடையாது. இந்த நிகழ்வில் பங்குபெற http://bit.Iy/386RysB என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும். கூடுதல்விவரங்களை http://www.sankariasacademy.com/free-ias-coaching/ என்ற லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x