Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

மத்திய சமூகநீதி அமைச்சகத்துடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி

சென்னை

சங்கர் ஐஏஎஸ் அகாடமி, மத்தியசமூகநீதி அமைச்சகம் இணைந்து,எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுபணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்க உள்ளன.

இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ்அகாடமி வெளியிட்டுள்ள செய்தி:

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்காக எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மத்திய சமூகநீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்காக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு 85 மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும். மாத உதவித் தொகையும் உண்டு.

மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10, 12-ம்வகுப்புகள், பட்டப் படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்காணல் நடைபெறும். பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு 50 மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுப் பயிற்சிக்கு 35 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாணவர்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 2021 மார்ச் 10-ம் தேதிக்குள் https://www.shankariasacademy.com/free-ias-coaching என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் நுழைவுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளம் மூலமாகவும்,9444166435, 7667766266 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் அறியலாம். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x