Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித் துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பின்னர், இறுதி முடிவுகளை முதல்வர் எடுப்பார். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பெருந்துறை ஐஆர்டிடி மருத்துவக் கல்லூரியில் கட்டணக் குறைப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்தான் முடிவெடுக்கவேண்டும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலுள்ள தனியார் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலமும், அரசுப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்படும் நிலை தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x