Published : 17 Feb 2021 06:04 PM
Last Updated : 17 Feb 2021 06:04 PM

ஐஏஎஸ் தேர்வெழுதப் பயிற்சி: தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு- அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அறிவிப்பு

குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சியளிக்க நடத்தப்பட்ட தேர்வில் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தும் அட்டவணையை அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பயிற்சித் துறைத் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலருமான வெ.இறையன்பு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர் நிலையினை அடையும் வகையில், பயிற்சியளிக்கப்படுகிறது.

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதனிலைத் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு 24.01.2021 அன்று 16 மையங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வில் 3,956 நபர்கள் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவு 12.02.2021 அன்று வெளியிடப்பட்டது.

இப்பயிற்சி மையத்தில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளவர்களின் தேர்வுப் பட்டியல் மற்றும் சேர்க்கை அட்டைகள் இன்று (17.2.2021) இப்பயிற்சி மையத்தின் http://www.civilservicecoaching.com/ என்ற இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சேர்க்கைக்கு வருகைபுரியும் ஆர்வலர்கள் 20.02.2021 அல்லது அதற்குப் பின்னர் கோவிட் 19 பரிசோதனை செய்து கோவிட் இல்லை என்ற சான்றினைக் கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கைக்கான அட்டவணை பின்வருமாறு:

1. பகுதி நேரம் ((Part Time அனைத்துப்பிரிவினர்- 22.2.2021 திங்கள்

2. முழு நேரம் (Full time) Non-Residential(CMDA-சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டது)- 23.2.2021 செவ்வாய்

3. முழு நேரம் ( (Full time) BC/BC(M)/MBC/DNC - 24.2.2021 புதன்

4. முழு நேரம் (Full time) SC/ST/SC(A)/DA/General Category- 25.02.2021 வியாழன்''

இவ்வாறு பயிற்சித் துறைத் தலைவர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x