Published : 13 Feb 2021 05:31 PM
Last Updated : 13 Feb 2021 05:31 PM

மேலாண்மைப் படிப்புக்கான மேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி

மேலாண்மைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான 'மேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.14) கடைசித் தேதி ஆகும்.

எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் படிப்புகளுக்கும் அது சார்ந்த துணைப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வாக 'மேட்' எனப்படும் மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு (Management Aptitude Test - MAT) நடத்தப்படுகிறது. இத்தேர்வு அகில இந்திய மேலாண்மை சங்கம் (All India Management Association) சார்பில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் இந்தியா முழுவதும் உள்ள பிசினஸ் ஸ்கூல் எனப்படும் தலைசிறந்த 600 கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும். காகித வழியிலும் கணினி வழியிலும் நடைபெறும் தேர்வுக்குக் கட்டணமாக ரூ.1,650- ஐச் செலுத்த வேண்டும்.

மேட் தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் நடைபெற உள்ளது. மேட் 2021 தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை (பிப்.14) கடைசித் தேதி ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.aima.in/content/testing-and-assessment/mat/mat என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x