Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

தையல், ஓவியம், உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு கோருபவர்கள் சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை

சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ் வழிஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்குரிய சான்றிதழ்களின் நகல்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 23.9.2017 அன்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தையல் பாடத்துக்கு 9.9.2019 அன்றும், ஓவிய பாடத்துக்கு 18.10.2019அன்றும், உடற்கல்வி பாடத்துக்கு28.10.2020 அன்றும் தேர்வுப்பட்டியல் வெளியானது.

இம்மூன்று தேர்வு பட்டியல்களிலும் தமிழ்வழி ஒதுக்கீடு, முன்னாள்ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியசிறப்பு ஒதுக்கீடுகளில் ஏற்கெனவேசான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்களில் தகுதியானோர் கிடைக்காததால் பெரும்பாலான இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தகுதியில்லாததன் காரணமாக புதிதாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னரே விண்ணப்பதாரர்களிடம் உரிய சான்றிதழ்களை பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி தமிழ்வழி ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டசிறப்பு ஒதுக்கீடுகளில் ஒதுக்கீடுகோரிய நபர்களில், அச்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பாடப்பிரிவு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தவிண்ணப்பதாரர்கள் மட்டும் குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிஅலுவலகத்தில் உரிய சான்றிதழ்களின் சான்றொப்பம் பெறப்பட்ட 2 நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி, ஓவிய பாடத்துக்குஇன்றும் (புதன்), உடற்கல்வி பாடத்துக்கு நாளையும் (வியாழன்), தையல் பாடத்துக்கு 12-ம் தேதியும் (வெள்ளி) சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். ஓவியம், தையல் பாடப்பிரிவுகளில் டிடிசி படித்தவர்களால் ஹையர் கிரேடுதேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்க இயலாது. காரணம் அந்ததேர்வை நடத்தும் அரசு தேர்வுகள்இயக்ககம், ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழியில் படித்ததற்காக சான்றிதழ் வழங்குவதில்லை என்றும் எந்த தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கும் ஹையர் கிரேடு தேர்வுக்கு பாடம் நடத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசு தேர்வு துறையே வழங்கஇயலாத ஹையர் கிரேடு தமிழ்வழிசான்றை, எப்படி வழங்க முடியும்என்று சிறப்பாசிரியர் தேர்வெழுதிய வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x