Last Updated : 07 Feb, 2021 03:14 AM

 

Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

களப்பணியில் கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்: நாளைய விடியலின் நம்பிக்கை நட்சத்திரங்கள்...

“தேசப்பற்று மிக்க 100 இளைஞர் களைக் தாருங்கள், நான் நம் நாட்டை உயர்த்திக் காட்டுகிறேன்” என்றார் வீரத்துறவி விவேகானந்தர்.

அப்படிச் சொன்ன அவர், இப்போது இருந்து, கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி சமூகப் பணியியல் துறை மாணவர்களின் நற்செயல்களைப் பார்த்தால், நிச்சயம் அதில் இருந்து, தனக்கான சிலரை தகுதியான நபர்களாக தேர்ந்தெடுத்திருப்பார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற அரசுக் கல்லூரிகளில், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே, முதுகலை சமூகப்பணியியல் பாடப்பிரிவு பயிற்றுவிக்கப் பட்டு வருகிறது. இம்மாணவர்கள் மதிப்பெண் பெற நடப்புத் தேர்வுகளோடு, சமூகம் சார்ந்த களப்பணியும் கட்டாயம்.

இதற்காக கிராம சேவைப் பணி, தன்னார்வப் பணிகளில் ஈடுபடுவது அவசியம். அதை பெயர் அளவுக்குச் செய்யாமல், தங்கள் கல்லூரி மாணவர்கள் மிக பொறுப்பாக செய்கின்றனர் என்று கூறுகிறார் இக்கல்லூரியின் முதல்வர் ர.உலகி.

“ஆண்டு தோறும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து ஒரு வார காலத்திற்கு கிராம சேவை முகாம் நடத்துகின்றனர். அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி, தூய்மைப் பணி செய்கின்றனர்.

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்பு ணர்வுப் பேரணி நடத்துதல், டெங்கு விழிப்பு ணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், இலவச மருத்துவ முகாம் நடத்து தல், கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளிமாணவர்களுக்குப் பல்வேறு போட்டி களை நடத்தி ஊக்கப்படுத்துதல் போன் றவற்றையும் துறை பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செய்கின்றனர்.

வீதி நாடகங்கள் மூலம் கிராம மக்களிடையே, ‘குடிப்பழக்கத்தின் தீமைகள்’ குறித்தும் உறவுகளை பேண வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், சில தொண்டு நிறுவனங் களுடன் இணைந்து விருத்தாசலத்தில் கரோனா விழிப்புணர்வு மற்றும் இருளர் சமுதாய பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் விதமாக ‘வாழ்வியல்திறன் மற்றும் பொது அறிவு மேம்பாட்டுப் பயிற்சி’ அளித்துள்ளனர்.

கடலூர் ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் இணைந்து கடலூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘குறுங்காடு திட்டம்’ மூலம் 1,000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

கரோனா பேரிடர் காலத்தில் தன் னார்வ அமைப்புடன் இணைந்து கடலூர் முதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி முழுவ தும் கரோனா விழிப்புணர்வு பணிகள் செய்து, கிருமிநாசினி தெளித்துள்ளனர். ஆதரவின்றி சாலையோரம் இருந்த முதியவர்களை மீட்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

கரோனா பேரிடர் காலத்தில் மக்களின் அவசர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட கால் சென்டரான 1077-ல் பணியாற்றியுள்ளனர். கடலூர் மாவட்ட பேரிடர் கால வானொலி யான 107.8 வானொலியிலும் ‘நிவர்’ புயல் காலத்தில் இம்மாணவர்கள் பணியாற்றியுள்ளனர். கரோனா பரவல் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இத்துறையின் மாணவி எஸ். நிகிதாவிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ரெட் கிராஸ் உடன் இணைந்து ‘நிவர்’ மற்றும் ‘புரவி’ புயல் காலங்களில் சிதம்பரம் வட்டார கிராம மக்களுக்கு அவசர உதவி களைச் செய்துள்ளனர்.

உரிய நேரத்தில் சரியான வழிகாட்டு தல்களை தந்து மாணவர்களை சமூகப் பணியியல் துறைத் தலைவர் முனைவர் நா. சேதுராமன், பேராசிரியர்கள் முனைவர் கோ. குமார், க. வினோத் ஆகியோர் உற்சாகப்படுத்தி வருகின்றனர்” என்கி றார் கல்லூரி முதல்வர்.

இம்மாதிரியான மாணவர்கள்தான் நம் சமூகத்தின் நாளைய நல் விடியலுக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x