Last Updated : 03 Feb, 2021 05:11 PM

 

Published : 03 Feb 2021 05:11 PM
Last Updated : 03 Feb 2021 05:11 PM

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி: கோவையைச் சேர்ந்த 47 பேருக்கு ரூ.1.94 லட்சம் ஊக்கத்தொகை

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று, ரொக்கப் பரிசு பெற்றவர்களுடன் ஆட்சியர் கு.ராசாமணி, விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன்.

கோவை

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த 47 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், 2018-19-ம் ஆண்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆர்.பி.ரவிச்சந்திரன் முன்னிலையில், 47 வீரர், வீராங்கனைகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் என ரூ.1.94 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தவர்களின் விவரம்:

தடகளப் போட்டியில் பிரவீன்குமார், ஷாலினி, ஆதர்ஷ்ராம் ஆகியோர் தங்கப்பதக்கமும், சுரேந்தர், அரவிந்த் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். பூப்பந்து போட்டியில் சவுமியா மேரி தங்கப் பதக்கமும், நந்தினி வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

கூடைப்பந்து போட்டியில் ஐஸ்வர்யா, பிரியா ஆகியோர் தங்கப்பதக்கமும், ஸ்ரீலட்சுமி, நிகிதா, தீபதர்ஷினி, பவித்ராஸ்ரீ, சத்யா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சைக்கிள் பந்தயத்தில் அனுபிரியா, ஆல்ஃபியா, அமிர்தபிரியா, மோகனா, விஷ்ணுபிரியா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

கராத்தே போட்டியில் நாகேந்திரன், இமானுவேல், அரவிந்த், சந்தோஷ் ஹமால் ஆகியோர் தங்கப்பதக்கமும், கைப்பந்து போட்டியில் இலக்கிய பிரபா தங்கப்பதக்கமும், சிலம்பாட்டப் போட்டியில் சந்திரமுகி வெண்கலப் பதக்கமும், நீச்சல் போட்டியில் பாவிகா துகார் தங்கப்பதக்கமும், டேக்வாண்டோ போட்டியில் சுஜித்குமார் தங்கப்பதக்கமும், தேஜாஸ்ரீ, மதுமிதா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ஹரிஹரசுதன் பிரமிதா, ஸ்ரீநிதி ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

வூசூ போட்டியில் பாலஹர்ஷினி, பிரடரிக் வென்சஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், மோகன்குமார், ஐஸ்வர்யா, அபர்ணா, அஹல்யா, அஸ்வத், அர்ச்சனா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

கேரம் போட்டியில் சூர்யா பிரசன் தங்கப் பதக்கமும், ஹரிஹரன் வெள்ளிப் பதக்கமும், செஸ் போட்டியில் பிரியங்கா தங்கப் பதக்கமும், தேஜஸ்வி வெள்ளிப் பதக்கமும், ரோலார் ஸ்கேட்டிங்கில் சுஜா தங்கப் பதக்கமும், ரிஷப் வெள்ளிப் பதக்கமும், அபிநயா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x