நடமாடும் படகு நூலகம்: இளைஞர்களுக்காக கொல்கத்தாவில் அறிமுகம்

நடமாடும் படகு நூலகம்: இளைஞர்களுக்காக கொல்கத்தாவில் அறிமுகம்
Updated on
1 min read

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்காகக் கொல்கத்தாவில் நடமாடும் படகு நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக மேற்கு வங்கப் போக்குவரத்துக் கழகம், பாரம்பரியப் புத்தகக் கடையுடன் இணைந்து இந்த முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

படகு நூலகத்தில் செல்வதன் மூலம் கொல்கத்தாவின் அழகை ஹுக்ளி நதிக்கரைப் பயணத்தின் வாயிலாக ரசித்தவாறே, ஒருவர் வாசிப்பில் தன்னை அமிழ்த்திக் கொள்ளலாம்.

இளையோர்களுக்கான படகு நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் சுமார் 500 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகில் சுமார் 3 மணி நேரம் பயணிக்க முடியும். மில்லினியம் பூங்காவில் இருந்து பெலுர் மாத் ஜெட்டி வரை படகு பயணித்து மீண்டும் திரும்பும். அனைத்து வார நாட்களிலும் தினசரிப் பயணம் 3 மணி நேரம் மேற்கொள்ள முடியும்.

இந்தப் படகில் இலவச வைஃபை வசதியும் உண்டு. படகு நூலகத்தில் பயணிக்கப் பெரியவர்களுக்கு ரூ.100 கட்டணமும் சிறியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.

படகு நூலகத்தில் புத்தகங்களுடன் கதை சொல்லல், நாடக ரீதியான வாசிப்புகள், கவிதை அமர்வுகள், புத்தக வெளியீடுகள், இசை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in