Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான 5-வது வானியல் முகாம்: பிப்.4 முதல் 3 நாட்கள் ஆன்லைனில் நடைபெறும்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான 5-வது வானியல் முகாம் பிப்.4 முதல் 3 நாட்கள் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இந்நிகழ்ச்சியில், வானியல் பயிற்சியாளர் வினோத்குமார் கலந்து கொண்டு வானியல் குறித்த அடிப்படை விவரங்கள், வானில் நிகழும்முக்கிய நிகழ்வுகள், பிரபஞ்சம், பால்வெளி மண்டலம் மற்றும்வானியலாளர்களின் கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்குகிறார்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 4 முறை வானியல் முகாம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏராளமான மாணவர்களின் வேண்டுகோளுக்கேற்ப 5-வது வானியல் முகாம் வரும் பிப்.4-ம்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 மணிவரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க லேப்டாப், ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதுமானது.

5-வது முகாமையும் ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ நிறுவனர் வினோத்குமார் நடத்துகிறார்.இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.294/-செலுத்தி https://connect.hindutamil.in/event/79-astronomy-camp-5.html என்ற இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x