Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

பத்தாம் வகுப்பு மாணவர்கள் 2.40 லட்சம் பேருக்கு சத்துணவு

சென்னை

பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு தினமும் சத்துணவு வழங்கப்பட்டு வருவதாக சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 43,283 சத்துணவு மையங்கள் மூலம் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 49 லட்சத்து 85,335 மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல்காரணமாக கடந்த மார்ச் 25 முதல்பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிசி,பருப்பு ஆகிய உலர் உணவு பொருட்கள், முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த19-ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் முதல் மதிய நேரங்களில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாணவர்களுக்கு முன்பு வழங்கியதைப் போன்று மதிய நேரங்களில் சத்தான உணவு வகைகள் தினமும் வழங்கப்படுகிறது. தினமும் 2 லட்சத்து 40 ஆயிரம்மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கி வருகிறோம். இதுதவிர, 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x