Published : 12 Jan 2021 02:21 PM
Last Updated : 12 Jan 2021 02:21 PM

உரிமையியல் நீதிபதி பதவி: முதன்மைத் தேர்வு முடிவுகள், நேர்காணல் தேதி அறிவிப்பு

உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அதேபோல அப்பதவிக்கான நேர்காணல் தேர்வுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதிக்கான 171 காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/ 2019 வெளியிடப்பட்டு முதல்நிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் 7,942 பேர் கலந்துகொண்டனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வு, 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 239 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து தற்போது நேர்காணல் தேர்வுக்குத் தற்காலிகமாக 58 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கு பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x