Published : 31 Dec 2020 02:00 PM
Last Updated : 31 Dec 2020 02:00 PM

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஜன.31 வரை விண்ணப்பிக்கலாம்: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் குரூப் பி மற்றும் சி பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். 18 முதல் 32 வயது வரையிலான பட்டதாரித் தேர்வர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு Combined Graduate Level (CGL) நான்கு நிலைகளாக நடைபெறும். முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வுகள் கணினி மூலமாகவும் 3-ம் நிலை காகித முறையிலும் நடைபெறும். தேவைக்கேற்ப 4-வது நிலைத் தேர்வு நடைபெறும்.

அந்த வகையில் கணினி அடிப்படையிலான முதல் நிலைத் தேர்வு 29.5.2021 முதல் 07.06.2021 வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் இதற்கான விண்ணப்பங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் 2021 ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x