Last Updated : 26 Dec, 2020 12:03 PM

 

Published : 26 Dec 2020 12:03 PM
Last Updated : 26 Dec 2020 12:03 PM

மத்திய அரசின் இன்ஸ்பையர் விருது: கோவை பள்ளி மாணவர்கள் 48 பேர் தேர்வு

கோவை

மத்திய அரசின் இன்ஸ்பையர் விருதுக்கு, கோவை பள்ளி மாணவர்கள் 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து 'இன்ஸ்பையர் விருது' வழங்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,371 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

''கோவை மாவட்டத்தில் இருந்து 47 மாணவர்கள் இன்ஸ்பையர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் எஸ்.மாதேஸ், தேரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.சுபரஞ்சனி மற்றும் பி.சுபாஷினி, கன்யா குருகுலம் பள்ளி மாணவி ஜி.தீபிகா, ஜிடி மெட்ரிக் பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஆனந்த், ஜிஆர்டி பப்ளிக் பள்ளி மாணவர் அகிலன் கண்ணன், சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சரவணன், ஷாஜகான்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜி.அபி, விளாங்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி எம்.தாரணி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெ.ஜாஸ்மின், குரும்பப்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி சூர்யா, உடையாம்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி சவுமியா, கீரணத்தம் நடுநிலைப்பள்ளி மாணவி சந்தியா, காளப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் தினகரன், அப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி ஹரிகிருஷ்ணா, சுதந்திரா மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ சாதனா, மத்வராயபுரம் அரசுப் பள்ளி மாணவி அஜித்ரா, ஜிஆர்டி மெட்ரிக் பள்ளி மாணவி ராகவி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவி அனுமோல் உண்ணி, சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளி மாணவி தனுஜா, ஒத்தகால்மண்டபம் அரசுப் பள்ளி மாணவி பிரமீஷா, சுகுணாபுரம் அரசுப் பள்ளி மாணவி ஆஃப்ரின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் பாலத்துறை அரசுப் பள்ளி மாணவி தரண்யா, மேட்டூர் நடுநிலைப்பள்ளி மாணவி மிருதுளா, குமிட்டிபதி அரசுப் பள்ளி மாணவர் தினேஷ்குமார், கிருஷ்ணாபுரம் சிஎம்எஸ் பள்ளி மாணவி வித்யா, காந்திமாநகர் அரசுப் பள்ளி மாணவர் முனீஸ்வரன், உப்பிலிபாளையம் சிஎம்எஸ் பள்ளி மாணவர் ரிதீஷ், மைக்கேல்ஸ் பள்ளி மாணவர் கபிலன், பெல்லாபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர் தரணீஷ், பகவான் மகாவீர் பள்ளி மாணவி மவுசிகா, தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி லலிதாதேவி, பெரியபோது அரசுப் பள்ளி மாணவர் பரத், தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளி மாணவி ஆதித்யன், மெட்டுவாவி நடுநிலைப்பள்ளி மாணவி பிரபாவதி, பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளி மாணவி கவுரி, செங்குட்டைபாளையம் அரசுப் பள்ளி மாணவர் ராமச்சந்திரன், முத்துகவுண்டனூர் அரசுப் பள்ளி மாணவி தேவிகா, பொள்ளாச்சி எம்.ஜி. பள்ளி மாணவி மீனாம்பிகா, புரவிபாளையம் அரசுப் பள்ளி மாணவர் நாகமாணிக்கம், சூலூர் அரசுப் பள்ளி மாணவி சுதா, வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி ரின்சியா பாத்திமா, வால்பாறை எஸ்எஸ்ஏ பள்ளி மாணவர் தேவன், மாசாணமுத்து மற்றும் ரோஹித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x