Last Updated : 22 Dec, 2020 07:19 PM

 

Published : 22 Dec 2020 07:19 PM
Last Updated : 22 Dec 2020 07:19 PM

90% மாற்றுத்திறன்; 20 அறுவை சிகிச்சைகள்: வாய் மூலம் தேர்வெழுதி ஜேஇஇ தேர்வில் வென்ற 21 வயது மாணவர் 

90 சதவீத மாற்றுத்திறனோடு 20 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையிலும், வாய் மூலம் தேர்வெழுதிய 21 வயது மாணவர் ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் துஹின் டே. சிறு வயதிலேயே மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டார் துஹின். 90 சதவீத மாற்றுத் திறனால், எலும்புகள் சரியாகச் செயல்பட மறுத்தன. இதற்காக அவரது உடம்பில் 20 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எலும்புகள் முறையாகச் செயல்படுவதற்காக, உடம்பில் ஏராளமான தகடுகள் பொருத்தப்பட்டன.

எனினும் மனம் தளராத துஹின், கடுமையாகப் படித்தார். கைகள் செயலிழந்த நிலையில், வாய் மூலம் மொபைல் போன் மற்றும் கணிப்பொறியைப் பயன்படுத்திப் படிக்கப் பழகினார். வாய் மூலமாகவே பேனாவைப் பிடித்து எழுதவும் கற்றுக் கொண்டார்.

கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்குப் பயிற்சி பெற்ற அவர், 2020ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வு எழுதினார். இதில் 438 ஆவது இடம்பிடித்துத் துஹின் தேர்வாகியுள்ளார். அவருக்கு மேற்கு வங்கம், ஷிப் பூரில் உள்ள இந்தியப் பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIEST), தகவல் தொழில்நுட்பப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து துஹின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ’’உலகப் புகழ்பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் என்னுடைய ரோல் மாடல். பொறியியல் துறையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் குறைவான உடல் உழைப்பே தேவைப்படும் என்பதால், என்னுடைய கனவுகளைப் பூர்த்தி செய்துகொள்ள இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x