முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

முனைவர் பட்டப்படிப்பு உதவித்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுதோறும் வழக்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் முனியநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* 2020 - 21ஆம் கல்வி ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் ஆதிதிராவிடர்கள், பழங்குடி மாணவர்களுக்குத் தமிழக அரசு தனியாகக் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் நான்கு ஆண்டுகளுக்கும் வருடத்துக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்படும்

* தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், முழு நேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும், தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெற இயலாது.

* இதற்கு மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* உதவித்தொகை பெற முதுகலைப் பட்டப் படிப்பில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 1,200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்படுவர்.

* மாணவருக்குப் பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட படிப்பு கால அளவிற்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகையை மாணவர்கள் பெறக்கூடாது.

* கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், 2021 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

* ஆதிதிராவிட மாணவர்கள், விண்ணப்பங்களை, 'ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 600005' என்ற முகவரிக்கும், பழங்குடியின மாணவர்கள், 'இயக்குனர், பழங்குடியினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை - 600006' என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய:

இவ்வாறு முனியநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in