Published : 11 Dec 2020 05:48 PM
Last Updated : 11 Dec 2020 05:48 PM

கேட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு; ஆட்சேபிக்க இன்று கடைசித் தேதி

முதுநிலை மேலாண்மைப் படிப்புக்கான கேட் தேர்வு விடைக் குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.

தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை மேலாண்மை பயில கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஐஐஎம் இந்தூர், அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, ராய்ப்பூர், ரோஹ்ட்க், போத்காயா, ராஞ்சி, கொல்கத்தா, ஷில்லாங், சம்பல்பூர், கோழிக்கோடு, உதய்பூர், விசாகப்பட்டினம், காஷிப்பூர், ஜம்மு, லக்னோ, நாக்பூர், திருச்சி ஆகிய 20 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் பயிலலாம்.

ஐஐஎம் அல்லாத சில நிறுவனங்களும் கேட் தேர்ச்சியைக் கணக்கில் கொண்டு சேர்க்கை வழங்குகின்றன.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு கடந்த நவம்பர் 29-ம் தேதி நாடு முழுவதும் 147 நகரங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐஎம் இந்தூர் நடத்தியது.

தேர்வுக்கான விடைக் குறிப்புகளை ஐஐஎம் இந்தூர் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட்டது. அவற்றில் பிழைகள் இருந்தால் ஆட்சேபனை தெரிவிக்க இன்று (டிச.11) கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் ரூ.1,200 செலுத்தி ஆட்சேபனையை iimcat.ac.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x