Published : 04 Dec 2020 03:49 PM
Last Updated : 04 Dec 2020 03:49 PM

தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு

தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''நாடு முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நவ.30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் டிச.31-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை, தொடர்புடைய உயர் கல்வி நிறுவனங்கள் 2021 ஜனவரி 15-ம் தேதிக்குள் யுஜிசி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.''

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து உயர் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x