Published : 26 Nov 2020 03:08 PM
Last Updated : 26 Nov 2020 03:08 PM

ஆவணங்களைச் சேமிக்கத் தனி தரவுத் தளம்: கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

கல்வி ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கத் தனி தரவுத் தளத்தைப் பயன்படுத்தத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களும் இதையே இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேசியக் கல்விக் களஞ்சியம் (என்ஏடி) சார்பில் டிஜிலாக்கர் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செயலியில் அனைத்துக் கல்வி சார்ந்த பதிவுகள், ஆவணங்களைச் சேமித்து வைக்குமாறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, என்டிஎம்எல் மற்றும் சிவிஎல் ஆகியவற்றில் ஆவணங்கள் சேமிக்கப்பட்டு வந்தன. இதைக் கடந்த மார்ச் மாதம் மத்தியக் கல்வி அமைச்சகம் நிறுத்தியது. தற்போது தேசியக் கல்விக் களஞ்சியம் சார்பில் டிஜிலாக்கர் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்கள் இதைக் கண்காணிக்கத் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், ஆவணச் சேமிப்பு வேலைகள் நடைபெறுவதை முறைப்படுத்தத் தனி தேசியக் கல்விக் களஞ்சிய மையங்கள் அமைக்கப்படுவதோடு, அவற்றைக் கல்வி நிறுவனங்களின் இணையதளங்களிலும் தெரிவிக்க வேண்டும் எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களும் டிஜிலாக்கர் செயலி மூலம் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள், கல்வி அட்டைகள் ஆகியவற்றைச் சேமித்து இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x