Published : 24 Nov 2020 03:12 PM
Last Updated : 24 Nov 2020 03:12 PM

நிவர் புயல்: குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக குரூப் 4 தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் குரூப் 4 தொகுதியில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 9,398 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடை பெற்றது. கரோனா பரவல் காரணமாகச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்ந்து தள்ளிப் போனது.

இதற்கிடையில் ஓராண்டுக்குப் பிறகு தட்டச்சர் பதவிக்கு நவம்பர் மாதத்தில் மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக இப்பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-IV (குரூப்-IV ல் அடங்கிய பதவிகள்) 2018-2019 மற்றும் 2019-2020 (Combined Civil Services Examination-IV (Group-IV Services)) -ல் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 02.11.2020 முதல் 26.11.2020 வரை மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘நிவர் புயல்’ காரணமாக 25.11.2020 மற்றும் 26.11.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 08.12.2020 மற்றும் 09.12.2020 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விண்ணப்பதாரர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் தனியே தகவல் தெரிவிக்கப்படும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x