சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் இந்திய வம்சாவளி, இந்திய மாணவர்கள் வெற்றி

சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் இந்திய வம்சாவளி, இந்திய மாணவர்கள் வெற்றி
Updated on
1 min read

சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவரும் இந்திய மாணவரும், முதல் இரண்டு இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து 14 வயதான இந்திய வம்சாவளி மாணவர் ஆதித்யா சவுத்ரி, குயின் சர்வதேச காமன்வெல்த் கட்டுரைப் போட்டியின் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

’நீல உலகின் குரல்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றுள்ளது. மெய்நிகர் முறையில் நடைபெற்ற விழாவில் ஆதித்யா சவுத்ரி, சிங்கப்பூரில் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டார். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான அனன்யா முகர்ஜி, தண்ணீர் தொடர்பான தனது கட்டுரைக்கு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜூனியர் பிரிவில் கானாவைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் கனடாவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். இவர்களுக்கு பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கேமில்லா பரிசுகளை வழங்கினார்.

ராயல் காமன்வெல்த் அமைப்பால் நடத்தப்படும் இப்போட்டியில் 53 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒரு வாரத்துக்கு லண்டன் அழைத்துச் செல்லப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in