Published : 21 Nov 2020 06:02 PM
Last Updated : 21 Nov 2020 06:02 PM

ராணுவ அதிகாரிகள் முதுகலைக் கல்வி பயிலப் புதிய வாய்ப்பு

ராணுவ அதிகாரிகள் படிக்க தேசிய மாணவர் படை இயக்குனரகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவு தேசிய மாணவர் படை இயக்குனரகத்தில் பணிபுரியும் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மேலாண்மை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளைப் படித்துப் பட்டம் பெற முடியும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கோவை மண்டல குரூப் கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக் கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், புல முதன்மையர் முத்துசாமி, தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் கர்னல் பி.தாமஸ் பிலிப், விங் கமாண்டர் யுவராஜ், கோவை மண்டல தேசிய மாணவர் படை அலுவலர் எம்.டி.கண்ணன், பல்கலைக் மேலாண்மைத் துறை தலைவர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x