Published : 11 Nov 2020 12:24 PM
Last Updated : 11 Nov 2020 12:24 PM

தேசியக் கல்வி நாள் இன்று: இந்திய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்

நாடு முழுவதும் இன்று (நவம்பர் 11) தேசியக் கல்வி நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும். 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் அபுல் கலாம் ஆசாத்.

இவரது தலைமையின் கீழ் 1951-ல் முதன்முதலாக ஐஐடி கல்வி நிறுவனம் காரக்பூரில் தொடங்கப்பட்டது. 1953-ல் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஏஐசிடிஇ தொடங்கப்பட்டது. இதுதவிர சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத் நாடக அகாடமி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தொடங்கப்பட, அபுல் கலாம் ஆசாத் காரணமாக இருந்தார். 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளராகவும் போற்றப்பட்டார்.

கல்வித் துறைக்கு இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் இவரது பிறந்த தினம், தேசியக் கல்வி நாளாகக் கடந்த 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. முதல் தேசியக் கல்வி நாளை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் டெல்லியில் கொண்டாடினார்.

அபுல் கலாம் ஆசாத்தின் மறைவுக்குப் பிறகு 1992இல் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x