

‘டாப்பர்ஸ் கிளாஸ்’, ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் இணைந்து குழந்தைகளுக்கான ‘ஜென் டூட்லிங்’ எனும் ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன. இந்தப் பட்டறை வரும் 16-ம் தேதி தொடங்கி, 7 நாட்கள் நடைபெறுகிறது.
மதுபானி கலைகளின் அடிப்படையான ‘ஜென் டூட்லிங்’, குழந்தைகளிடமுள்ள படைப்பாற்றலை மேம்படுத்தி செறிவை உண்டாக்கக் கூடியது. ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பட்டறையில் பங்கேற்று பயனடையும் நோக்கில் ‘ஜென் டூட்லிங்’ எனும் ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை ‘டாப்பர்ஸ் கிளாஸ்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்துகின்றன.
இதில், 8 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி பட்டறை நவ.16 முதல் 22-ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.
பல ஆண்டுகள் அனுபவமிக்க புகழ்பெற்ற பயிற்சியாளர் சிந்துஜாபுவனேஸ்வரன் இந்நிகழ்வை வழங்க உள்ளார். 7 நாட்களும் ஒவ்வொரு வித்தியாசமான தலைப்பின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.708/-. பங்கேற்க விரும்புபவர்கள் https://rb.gy/x3omg8 எனும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.