Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM

பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளிவைக்க முடிவு: அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

சென்னை

கரோனா பரவல் மற்றும் வட கிழக்கு பருவமழை அச்சம் காரண மாக பள்ளி, கல்லூரிகள் திறப்பை மீண்டும் தள்ளிவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி கள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை நவ.16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற் கான முன்னேற்பாடு நடவடிக் கைகளை கல்வித்துறை அதிகாரி கள் தொடங்கினர்.

இதற்கிடையே, பருவமழைக் காலம் என்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க பெற் றோர்கள், கல்வியாளர்கள் தரப் பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இங்கிலாந்து உட்பட பல் வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள் ளது. இதுதவிர கரோனா 2-வது அலை வீசக்கூடும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

மேலும், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நவம் பரில் அதிக அளவு மழை பெய்யக்கூடும். டெங்கு உட்பட பருவகால நோய்களும் பரவி வருகின்றன. எனவே, மாணவர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

பரிசீலனை

கல்லூரிகளை பொறுத்தவரை நடப்பு பருவத்துக்கான தேர்வுகள் இந்த மாத இறுதியில் தொடங் கப்பட உள்ளன. அதனால், கல்லூரி களை திறக்க வேண்டிய அவ சியமில்லை. இவற்றை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் நோயின் தீவிரம் அறிந்து முடிவெடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார். இவ்வாறு அவர் கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x