Last Updated : 26 Oct, 2020 05:41 PM

 

Published : 26 Oct 2020 05:41 PM
Last Updated : 26 Oct 2020 05:41 PM

வரலாற்றிலேயே முதல் முறை: மெய்நிகர் முறையில் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா

சென்னை

வரலாற்றிலேயே முதல் முறையாக மெய்நிகர் முறையில் சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழா இந்த ஆண்டு நடத்தப்பட்டது.

இந்த விழா நேரடியான பட்டமளிப்பு மற்றும் ஆன்லைன் பட்டமளிப்பு இரண்டும் கலந்ததாக மெய்நிகர் முறையில் நடைபெற்றது. நேற்று (அக்.25) நடைபெற்ற 57-வது பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,346 பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

விழாவில் நோபல் பரிசு பெற்றவரும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் இருக்கையின் வேந்தருமான பேராசிரியர் டேவிட் ஜே. குரோஸ் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை ஐஐடி ஆளுநர்கள் குழுவின் தலைவரும், மகிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான பவர் கோயங்கா பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை ஏற்றார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டில் மொத்தம் 2,346 பட்டங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு கல்வியாண்டிலேயே மிக அதிகபட்சமாக 353 பிஎச்டி பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பட்டங்களில் பிஎச்டி, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்த பிஎச்டி, மற்றும் இரட்டை டிகிரி பிஎச்டி ஆகியன அடங்கும்.

மெய்நிகர் முறையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா வீடியோவைக் காண:

https://fromsmash.com/IIT-Madras-Convocation-2020-Full-Video-25th-Oct-2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x