Published : 26 Oct 2020 04:02 PM
Last Updated : 26 Oct 2020 04:02 PM

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நாளை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (அக்.27-ம் தேதி) ஆன்லைனில் தொடங்குகிறது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதமான 547 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை டிஜிஎச்எஸ் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்த உள்ளது.

நீட் தேர்வில் முதல்கட்டக் கலந்தாய்வுக்குத் தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் இணையதளத்தில், நாளை முதல் நவ. 2-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
* mcc.nic.in என்ற இணையதளத்தில் UG Medical Counselling என்ற தேர்வை க்ளிக் செய்ய வேண்டும். இடது பக்கத்தில் உள்ள New Registration என்ற தெரிவைத் தேர்ந்தெடுத்து, தகவல்களை நிரப்ப வேண்டும்.

* புதிய எண்ணும் கடவுச்சீட்டும் தோன்றும். அதைக் கொண்டு Candidate login என்ற பகுதிக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும்.

* அதில் மாணவர்கள் தங்களின் பதிவு எண், பெயர், நீட் தேர்வு ஹால்டிக்கெட்டில் உள்ள பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.

* பதிவு செய்யப்பட்ட பிறகு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் விண்ணப்பம் முழுமை பெறும்.

* அதைத் தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை முன்னுரிமையின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

* தாங்கள் தேர்வு செய்த கல்லூரியை வரும் 28-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x