Published : 24 Oct 2020 06:34 AM
Last Updated : 24 Oct 2020 06:34 AM

என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா: பதிவு செய்ய கடைசி தேதி அக்.28 வரை நீட்டிப்பு

சென்னை

என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஆன்லைன் விநாடி-வினாவில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாகக் கொண்டு அக்.27 முதல் நவ.2 வரை ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020’ நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு ‘விழிப்பான இந்தியா; வளமான இந்தியா’ எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளிமாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். 5, 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 8, 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். அக்.29-ல் ஜூனியர்களுக்கான போட்டியும், அக்.30-ல்சீனியர்களுக்கான போட்டியும், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான இறுதிப் போட்டி அக்.31-ம் தேதியும்நடைபெறும். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/special/nlc-quiz எனும் லிங்க்கில் பதிவு செய்யவேண்டும்.

இப் போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள் மற்றும் தலைப்புகள் / பாடங்கள் மேற்கண்ட லிங்க்கில் வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் அக்.28.

இந்த நிகழ்வின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் குவிஸ் ஐடி இணைந்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389, 9003196509 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x