பொறியியல் கலந்தாய்வு: 2-வது சுற்றில்13,415 இடங்கள் நிரம்பின

பொறியியல் கலந்தாய்வு: 2-வது சுற்றில்13,415 இடங்கள் நிரம்பின
Updated on
1 min read

பொறியியல் கலந்தாய்வின் 2-வது சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்கள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகப் பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்புக் கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியானது. விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களி வாரிசுகள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்.8-ம் தேதி தொடங்கியது. அதில், குறைவான மாணவர்களே கலந்து கொண்டனர்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, 7,510 மாணவர்களே தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்தனர். இதேபோல், 2-வது சுற்றிலும் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகின. இதில், 12,264 முதல் 35,167 இடங்களைப் பிடித்த 22,903 மாணவர்களுக்கு, கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2-வது சுற்றில் கல்லூரியைத் தேர்வு செய்த மாணவர்களின் விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 13,415 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.

இதற்கிடையே 3-வது சுற்றுக் கலந்தாய்வு அக்.16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-வது சுற்றுக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்வு செய்தோர் விவரத்தைக் காண: https://static.tneaonline.org/docs/Academic_Round2_Provisional_Allotment.pdf?t=1603175728035

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in