Last Updated : 19 Oct, 2020 06:55 AM

 

Published : 19 Oct 2020 06:55 AM
Last Updated : 19 Oct 2020 06:55 AM

தெலங்கானா மாநிலத்தில் பட்டியலின மாணவர்கள் 190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி: ஒடுக்கப்பட்ட குழந்தைகளை உய்விக்க வந்த ஐபிஎஸ் அதிகாரி

ஆர்.எஸ்.பிரவீன்குமார்

தெலங்கானா சமூக மற்றும் பழங்குடி நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்ததலித், பழங்குடி சமூக மாணவர்களில் 190 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலங்கானா சமூகநல உண்டு உறைவிட கல்வி சமூகத் துறை நடத்திவரும் பள்ளிகளில் படித்த தலித் மாணவர்களில் 142 பேர் இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோன்று தெலங்கானா பழங்குடி நல உண்டு உறைவிட கல்வி சமூகத் துறை நடத்திவரும் பள்ளிகளில் படித்த 48 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2012-13-ம் கல்வி ஆண்டில், தெலங்கானா சமூக மற்றும் பழங்குடி நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்த தலித், பழங்குடி சமூக மாணவர்களில் 3 பேர் மட்டுமேஎம்பிபிஎஸ் படிக்க முடிந்தது. பிறகு தெலங்கானா சமூக மற்றும்பழங்குடி நலன் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலராக டாக்டர்ஆர்.எஸ்.பிரவீன்குமார் பொறுப்பேற்றது முதல் இந்தத் துறையில் உள்ள 268 சமூகநல பள்ளிகளில் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சீரிய பணிகள்

குறிப்பாக 2014-ம் ஆண்டில், ஆர்.எஸ்.பிரவீன்குமாரின் வழிகாட்டுதலில் தெலங்கானா பழங்குடியின சிறுமி மாலவத் பூர்ணா, தலித் மாணவர் ஆனந்தகுமார் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்தனர். இதுதவிர கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘சாமுராய் முகாம்’களை கோடை விடுமுறையில் பட்டியலின மாணவர்களுக்கு பிரத்யேகமாக பிரவீன்குமார் நடத்தி வருகிறார். இம் முகாமில் பல்வேறு தனித்துவமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் பிரவீன்குமாரின் பெற்றோர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். இருப்பினும், சாதி காரணமாக அவர்கள் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை பிரவீன்குமார் நினைவுகூர்ந்தார்.

கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும்

தன்னுடைய கல்லூரி நாட்களில்கூட ‘இடஒதுக்கீட்டு நபர்கள்’ என்று அச்சிட்ட காகிதம் ஒட்டப்பட்ட குளியலறைகளை பயன்படுத்த, தான் நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறுகிறார். இந்நிலையில் கல்வி மட்டுமே விடுதலைக்கான வழி என்று உறுதிபூண்டார். தான் ஐபிஎஸ் அதிகாரியாக முன்னேறியதோடு நில்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளின் வளர்ச்சிக்காக துடிப்புடன் செயலாற்றி வருகிறார்.

தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் தெலங்கானா பட்டியலின மாணவர்கள் குறித்து அவர் கூறியதாவது:

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கும் தெலங்கானா பட்டியலினமாணவர்களின் பெற்றோர் பீடி தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலைசெய்யும் பணிப்பெண்கள், காவலாளிகள், கடைநிலை ஊழியர்கள் போன்றோர்களே.

இப்படியான பின்தங்கிய சமூகப் பின்னணியில் இருந்து வந்து, நீட்தேர்வில் வெற்றி அடைவது என்பதுமிகப் பெரிய சாதனை. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்விஅளித்து அவர்களை சாதனையாளராக உயர்த்த கடின உழைப்பை செலுத்தியவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களே. கே.ஜி.-பி.ஜி. திட்டம் என்பதன் வழியாக தெலங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பழங்குடி கிராம மற்றும் நகர குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அவர்கள் நாட்டின்தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தெலங்கானாவின் சமூக பொருளாதார வளர்ச்சியை இது காட்டுகிறது.

இவ்வாறு பிரவீன்குமார் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x