Published : 17 Oct 2020 06:55 AM
Last Updated : 17 Oct 2020 06:55 AM

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழக மாணவர் 8-வது இடம் பிடித்து சாதனை

நீட் தேர்வில் 7.7 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் தமிழக மாணவர் 8-வதுஇடம் பிடித்து சாதனை படைத்துள் ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்.13-ம் தேதிநடந்தது. தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14-ம் தேதி மறுதேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் என்டிஏ, நேற்று மாலை வெளியிட்டது. மொத்தம் 7 லட்சத்து 71,500(56.44%) பேர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 99,610 மாணவர்கள் தேர்வெழுதியதில் 57,215 பேர்(57.44 சதவீதம்) தகுதி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம்.

நீட் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு720 மதிப்பெண் எடுத்து தேசியஅளவில் முதலிடம் பிடித்துள்ளனர். நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை.

அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 8-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்உள்ளிட்ட விவரங்களை என்டிஏஇணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x