Last Updated : 13 Oct, 2020 01:36 PM

 

Published : 13 Oct 2020 01:36 PM
Last Updated : 13 Oct 2020 01:36 PM

தொழில்நுட்பத்தின் தேவையை உணர்த்திய கரோனா: மைக்ரோசாஃப்டுடன் கைகோத்த ஏஐசிடிஇ

அடுத்த தலைமுறை மாணவர்கள், கல்வியாளர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஏஐசிடிஇ கைகோத்துள்ளது.

கரோனா வைரஸும் அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமும் உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் தேவையை உணர்த்தியுள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்திக் கண்காணிக்கும் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது.

இதன்மூலம் மாணவர்களும் கல்வியாளர்களும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றறிய முடியும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), தரவு அறிவியல் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளில் நிபுணத்துவம் பெற முடியும்.

மைக்ரோசாஃப்ட் மற்றும் ஏஐசிடிஇ-ன் கூட்டு நடவடிக்கை மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மைக்ரோசாஃப்ட்டின் 1,500 படிப்புகள் இலவசமாகக் கிடைக்கும். இவை ஏஐசிடிஇயின் மின்னணுக் கற்றல் தளமான ELIS பக்கத்தில் இருக்கும்.

இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி கூறும்போது, ''கோவிட்-19, தொழில்நுட்பத்தின் தேவையைத் தெளிவாகவே எடுத்துக்காட்டி விட்டது. எதிர்காலக் கற்றல், தொழில்நுட்பத்தின் ஆதரவுடனேயே இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது. வருங்காலத்தில் டிஜிட்டலில் பயணிக்க மாணவர்களைக் கூடுதல் திறன்களோடு தயார்படுத்தும் பயணத்தில் ஏஐசிடிஇயுடன் இணைந்ததில் மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x