Published : 09 Oct 2020 08:13 AM
Last Updated : 09 Oct 2020 08:13 AM

ஆக்ஸ்போர்டு, யேல் பல்கலை. கிளைகள் இந்தியாவில் தொடங்க நடவடிக்கை

புதுடெல்லி

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:

இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. 2021 வாக்கில் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள் என உலக வங்கி கணித்துள்ளது. மேலும் சுமார் 7.5 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதற்காக ஆண்டுதோறும் ரூ.1.1 லட்சம் கோடியை செலவிடுகின்றனர். நம் நாட்டு கல்லூரிகளின் பாடதிட்டத்துக்கும் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைக்கும் இடைவெளி உள்ளது. எனவே, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய பிரதமர் மோடி விரும்புகிறார். குறிப்பாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்கள் கிளையை இந்தியாவில் தொடங்கவும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டி உள்ளது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x