Published : 06 Oct 2020 07:10 AM
Last Updated : 06 Oct 2020 07:10 AM

அண்ணா பல்கலை. பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியன இயங்குகின்றன. இவற்றில் பேராசிரியர், அலுவலகஉதவியாளர் உட்பட 400-க்கும்மேற்பட்ட பணியிடங்கள் காலி யாக உள்ளன.

இதில் 70 பேராசிரியர்கள் உட்பட 245 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ள பட்டதாரிகள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் அக்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை சான்றிதழ்களுடன் இணைத்து அக். 28-ம் தேதிக்குள் பல்கலை.க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று துறை பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x