Last Updated : 02 Oct, 2020 11:50 AM

 

Published : 02 Oct 2020 11:50 AM
Last Updated : 02 Oct 2020 11:50 AM

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: கோவையில் 8,685 பேர் எழுதுகின்றனர்

கோவை

நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக். 4) நடைபெறும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை, கோவையில் 21 மையங்களில் 8,685 பேர் எழுதுகின்றனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, நாளை மறுநாள் (அக். 4) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 21 மையங்களில் நடைபெற உள்ள இத்தேர்வை 8,685 பேர் எழுதுகின்றனர். அதன் விவரம்:

பீளமேடு பிஎஸ்ஜி சர்வஜனா பள்ளியில் 480 பேர், சிஐடி கல்லூரியில் 576 பேர், சுங்கம் நிர்மலா மகளிர் கல்லூரியில் 576 பேர், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 384 பேர், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 576 பேர், குட்செட் ரோடு பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளியில் 384 பேர், ஆர்.எஸ்.புரம் அம்மணி அம்மாள் மாநகராட்சிப் பள்ளியில் 480 பேர், கிருஷ்ணம்மாள் பெண்கள் பள்ளியில் 288 பேர், தடாகம் ரோடு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 576 பேர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 576 பேர், ரங்கநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 480 பேர், சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் 576 பேர், கண்ணம்பாளையம் ஆர்விஎஸ் தொழில்நுட்ப வளாகங்களில் 960 பேர், அரசு கலைக் கல்லூரியில் 480 பேர், பெரியகடைவீதி மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 288 பேர், புரூக்பாண்ட் ரோடு தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் 288 பேர், ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 288 பேர், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 288 பேர், அவிநாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 115 பேர், மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 26 பேர் தேர்வெழுதுகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேர்வர்கள் முதல் தாள் தேர்வை எழுத காலை 9.20 மணிக்கு முன்பாகவும், 2-ம் தாளை எழுத பிற்பகல் 2.20 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையங்களுக்குள் வந்துவிட வேண்டும். வாயிற்கதவு பூட்டப்பட்ட பிறகு யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணுப் பொருட்களுக்கு அனுமதி கிடையாது.

தேர்வில் கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். நுழைவுச்சீட்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். அதில் ஏதேனும் தெளிவில்லாமல் இருப்பின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். தேர்வர்களுக்குப் போக்குவரத்து, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், சமூகப் பாதுகாப்பு ஆணையர் லால்வேனா, யூபிஎஸ்சி தனிச் செயலர் ரீட்டா பட்லா ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 21 ஆய்வு அலுவலர்கள், 56 உதவி மைய மேற்பார்வையாளர்கள், 763 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர, மாவட்டக் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x