Last Updated : 28 Sep, 2020 07:04 PM

 

Published : 28 Sep 2020 07:04 PM
Last Updated : 28 Sep 2020 07:04 PM

விண்ணப்பங்கள் அதிகரிப்பு எதிரொலி: கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அனுமதி

மதுரை  

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்தபடி, கணிதம் உட்பட இளங்கலைப்பாட பிரிவுகளில் 60 மாணவ, மாணவிகளும், அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வசதியைப் பொறுத்து 40 மாணவர்களும் இனச்சுழற்சி அடிப்படையில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசு. அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலை உறுப்பு கல்லூரிகள், பல்கலை கல்லூரிகளில் என, 106-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கடைசி நேரத்தில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பல்கலைக்கழகம் அனுமதி வழங்குவது வழக்கம்.

இதன்படி, இவ்வாண்டு அனைத்து கலை, அறிவியல் பாடப் பிரிவு களுக்கு ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடந்தாலும் பிற ஆண்டுகளை போன்று கூடுதல் விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பெரும்பாலும் அட்மிஷன் முடிந்த நிலையில் அரசு கல்லூரிகளில் இளநிலை வகுப்புகளுக்கு தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உட்பட்ட அரசு. அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலை உறுப்பு கல்லூரிகள், பல்கலை கல்லூரிகளில் என, 106-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதலாக மாணவ, மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு கலை, அறிவியல் பாடப் பிரிவுகளிலும் சுமார் 12 மாணவர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. கட்டமைப்பு வசதிகளை பொறுத்த அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவெடுக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒருசில கல்லூரிகளில் ஏற்கனவே கூடுதல் மாணவர்களை சேர்த் துள்ள நிலையில், அவர்களை கூடுதல் மாணவர் சேர்க்கையில் ஈடு செய்வதாகவும் கூறப்படுகிறது.

சில இடங்களில் கூடுதல் மாணவர் சேர்க்கையை எதிர்பார்த்து காத்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு இது ஏமாற்றத்தை உருவாக்குவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அரசுக் கல்லூரி முதல்வர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ கல்லூரி கட்டமைப்பு வசதியைப் பொறுத்தே கூடுதல் மாணவர்களை சேர்க்க முடியும். ஆய்வகம், போதிய வகுப்பறையின்றி கூடுதல் மாணவர்களை சேர்க்கும்போது, சில நடைமுறை சிக்கல் ஏற்படும். ஆனாலும் பல்கலைக்கழகம் அனுமதித்த 20 சதவீதம் முடியாவிடில் 10 சதவீதம் மாணவர்களை சேர்க்கலாம்,’’ என்றார்.

காமராசர் பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவின்பேரில். இப்பல்லை நிர்வாகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றிக்கை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கூடுதல் மாணவர்கள் கலை, அறிவியல் பாடங்களில் பட்டம் பெறுவர். கூடுதல் மாணவர் சேர்க்கையை தொடர்ந்து அதற்கான வசதி களை ஏற்படுத்த கல்லூரி நிர்வாகங்கள் முயற்சிக்கவேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x