Published : 28 Sep 2020 08:17 AM
Last Updated : 28 Sep 2020 08:17 AM

‘இன்ஸ்பைரோ’ - மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி; கப்பல் அமைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சி வாய்ப்புகள்: டிஆர்டிஓ இயக்குநர் வி.நடராஜன் தகவல்

சென்னை

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்(என்டிஆர்எஃப்), FIITJEE ஆகியவை இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ என்ற பொறியியல், மருத்துவத் துறை ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியின் 2-வது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

2-ம் நாளான சனியன்று, சென்னை ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் (ஆர்ஐசி), டிஆர்டிஓ இயக்
குநர் டாக்டர் வி.நடராஜன், ‘கப்பற்படை அமைப்புகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்றியதாவது:

தேசத்தின் பாதுகாப்புக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் முக்கிய
நோக்கமாகும். நமது கடற்படைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பலுக்கான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க பணிகள் நடந்துவருகின்றன.

கப்பலுக்கான சோனார் கருவி உருவாக்கத்தில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது, வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் கப்பல்களிலும் நாம் உருவாக்கிய சோனார் கருவிதான் பொருத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் முயன்று படித்தால் அவர்களது இலக்குகளை அடைய முடியும். கப்பல் அமைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சி வாய்ப்புகள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியின் மூலமாக நாம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரக்பூர் ஐஐடி-யில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிகல் கம்யூனிகேஷன் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர் கே.யோகேஸ்வர கிருஷ்ணா பேசும்போது, “நான் 7-ம்வகுப்பு படிக்கும்போதே FIITJEE-இல் சேர்ந்து பயிற்சி பெற்றேன். எனது அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தையும் சிறந்த பயிற்சியையும் எனக்கு அளித்தார்கள்” என்றார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ சர்க்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கடந்த 2 நிகழ்வுகளைத் தவறவிட்டவர்கள் https://bit.ly/2HBVgQR, https://bit.ly/2S293Sz என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x