Published : 27 Sep 2020 07:33 AM
Last Updated : 27 Sep 2020 07:33 AM

இன்று ஜேஇஇ பிரதானத் தேர்வு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு இன்று (செப்.27) நடைபெறுகிறது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் செப்.1 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு இன்று (செப்.27) நடக்கிறது. காலை முதல் தாள் தேர்வும், மதியம் 2-ம் தாள் தேர்வும் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 2.4 லட்சம் பேர் எழுதவுள்ளனர். பிரதானத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கலந்தாய்வு மூலம் ஐஐடிகளில் சேரமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x