Published : 21 Sep 2020 07:37 AM
Last Updated : 21 Sep 2020 07:37 AM

அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆங்கில மொழித் தொடர்பு பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றத்தின் அறிவிப்பு குறித்து விளக்கம்

தமிழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில் முதல் 2 பருவத்தில் மொழித்தாளாக இருந்த ஆங்கிலத் துக்குப் பதில், ஆங்கில மொழித் தொடர்பு என்ற புதிய பாடம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில், 4-ம் பகுதியில் விருப்பப் பாடங்களுக்குப் பதில், ஆங்கில பாடத்தை மாநில உயர் கல்வி மன்றம் கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும், அனைத்து பல்கலை. மற்றும் கல்லூரிகளிலும் ஒரே ஆங்கிலப் பாடநூலை பரிந்துரை செய்து, நடப்பு ஆண்டில் பின்பற்றவும் உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், தமிழுக்கு மாற்றாக ஆங்கிலம் முன்னிறுத்தப்படுவ தாகவும், ஒரே பாடநூல் கொண்டு வந்து பல்கலை. மற்றும் கல்லூரி களின் தன்னாட்சி அங்கீகாரத்தில் தலையிடுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

மாநில ஒருங்கிணைந்த பாடத் திட்டக் குழுவின் பரிந்துரையின்படி, கல்லூரி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

குறிப்பாக பல்கலைக்கழகங் கள், தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலை கல்வி நிறுவனங்களின் பாடப்பிரிவுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைய தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் முடிவு செய்தது. இந்த 2 முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், உலகளா விய வேலைவாய்ப்பு தேவை களுக்கேற்ப, மாணவர்கள் ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ளவும் தான் ஆங்கில மொழித் தொடர்பு பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இதைத்தான் புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்துகிறது. அதேநேரம், தமிழ்மொழி பாடம் நீக்கப்படவில்லை.

பொறியியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும்போது, துறைசார்ந்த ஆங்கில மொழித் திறன் வளமாக இருக்க வேண்டும் என்பதற்கா கவே, நான்காம் பகுதியில் விருப்பப் பாடங்களுக்கு பதில், ஆங்கில பாடம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.

சில பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் ஆங்கில திறன் கல்வி, பிற பல்கலைக்கழகங்களைவிட மிக மோசமான நிலையில் உள் ளது. இதைக் களைய வேண்டிய கட்டாயம் மன்றத்துக்கு உள்ளது. எனவேதான், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே தரமிக்க பாடநூல் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x