Published : 21 Sep 2020 07:23 AM
Last Updated : 21 Sep 2020 07:23 AM

‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி; டிஆர்டிஓ ஆய்வகங்களில் விஞ்ஞானி பணிகளில் சேருவதற்கான வழிமுறைகள்: ஆவடி போர் வாகன ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் விளக்கம்

சென்னை

டிஆர்டிஓ ஆய்வகங்களில் விஞ் ஞானி பணியில் சேருவதற்கான வழிமுறைகள் குறித்து ஆவடி போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் விளக்கம் அளித்தார்.

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் நிகழ்ச்சியில் ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்கு நர் விஞ்ஞானி டாக்டர் வி.பாலமுரு கன், ‘போர் வாகன ஆராய்ச்சி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் 50 ஆய்வகங்கள் உள்ளன. சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ ஆய்வ கங்களில் ஒன்றாகும். இங்கு ராணு வம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கு தேவை யான போர் வாகனங்கள், ஏவுகணை கள், ரேடார்கள், பீரங்கிகள் போன்ற போர்த் தளவாடங்களின் வடிவ மைப்பு, உற்பத்தி, ஆராய்ச்சி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. பாதுகாப்பு சாதனங்கள் தொடர்பான புதிய தொழில்நுட்பங் களைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

வி.பாலமுருகன்

டிஆர்டிஓ-வில் விஞ்ஞானி (கிரேடு-பி) பதவியில் பொறியியல் பட்டதாரிகளும் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் போன்றவை)முதுகலை அறிவியல் பட்டதாரி களும் (இயற்பியல், வேதியியல், கணிதம்) சேரலாம். ‘கேட்’ நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் முதல்கட்டத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படு கிறார்கள். அதைத்தொடர்ந்து விஞ்ஞானி நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விஞ்ஞானி பதவிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதுதொடர்பான அறிவிப்பு நாளி தழ்களிலும் டிஆர்டிஓ இணைய தளத்திலும் (பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்) வெளியிடப்படும். டிஆர்டிஓ பணிகளில் தமிழக இளைஞர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளது. டிஆர்டிஓ பணி வாய்ப்புகள் குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி பால முருகன் கூறினார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ சர்குலேஷன் பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வு வரும் 3 வாரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடைபெற வுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இதில் பங் கேற்கலாம். பங்கேற்க கட்டணம் கிடையாது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நிகழ்வு நடை பெறும்.

இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 3 நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.youtube.com/watch?v=0mvjIsrz0w4, https://www.youtube.com/watch?v=xNd9PJiAc74, https://youtu.be/aiqtptSI5U4 ஆகிய யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x