Published : 21 Sep 2020 07:02 AM
Last Updated : 21 Sep 2020 07:02 AM

ஏழ்மையில் கால்வாய் தூர்வாரும் பணிக்கு சென்ற மாணவனுக்கு ‘டேப் கணினி’ பரிசாக வழங்கிய காவல் துணை ஆணையர்கள்

ஏழ்மையில் கால்வாய் தூர்வாரும் பணிக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவனை நேரில் அழைத்து, டேப் கணினி பரிசு வழங்கி துணை ஆணையர்கள் ஊக்குவித்துள்ளனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகன் சாமுவேல். இவர் 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவலால் பள்ளிகள் இயங்காத சூழலில், ஆன்லைன் வகுப்புக்காக ஆண்ட்ராய்டு செல்போன் வாங்க வசதி இல்லாத காரணத்தால் கோயம்பேடு பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதையறிந்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், அந்த மாணவனுக்கு உதவி செய்ய அறிவுறுத்தினார். இதையடுத்து மாணவன் சாமுவேலின் படிப்புக்காக காவல் துணை ஆணையர்கள் ஜவஹர், ராஜேஷ் கண்ணா ஆகியோர் டேப் கணிணி (டேப்லெட்) வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும், இந்த மாணவனின் விருப்பப்படி, ஐபிஎஸ் போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் கொடுங்கையூர் காவல் நிலைய போலீஸார் மாணவனின் இல்லத்துக்கு தினமும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளனர்.

திருடிய மாணவனுக்கு உதவி

சென்னை, மணலி சாலை, கான்கார்டு பேருந்து நிறுத்தம் அருகே செப். 9-ம் தேதி காலை 10 மணியளவில் லாரி ஓட்டுநர் அழகு முருகன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அழகுமுருகனின் செல்போனை பறித்து தப்பினர்.

இதை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தப்பி ஓடிய 3 பேரில் ஒருவரை பிடித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயதுடைய இளங்குற்றவாளி என்பது தெரியவந்தது.

போலீஸாரின் தொடர் விசாரணையில் இளஞ்சிறுவனின் தந்தை மது போதைக்கு அடிமை யானவர் என்பது தெரியவந்தது. மேலும் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனிடம் ஆன்லைன் கல்விக்கு தேவையான செல்போன் இல்லை. இதனால், அவ னுக்கு போன் வாங்கித் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி குற்ற வாளிகள் 2 பேர் சிறுவனை செல் போன் பறிப்பு குற்றத்துக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

தற்போது, இளஞ்சிறுவனை நல் வழிப்படுத்தும் வகையில் திரு வொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, விலை உயர்ந்த செல்போனை சிறுவனுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x