Published : 17 Sep 2020 06:43 AM
Last Updated : 17 Sep 2020 06:43 AM

‘இந்து தமிழ் திசை’, ‘பிரைட் மாடர்ன் ஸ்கூல்’, ‘பிரைன்ஃபீட்’ நடத்தும் ‘தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: இளம் தொழில்முனைவோருக்கு செப்.20-ல் வல்லுநர்கள் ஆலோசனை

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், ‘பிரைட் மாடர்ன் ஸ்கூல்’, ‘பிரைன்ஃபீட்’ உடன் இணைந்து நடத்தும் ‘தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி செப்.20-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் பங்கேற்று, தங்கள் வெற்றியின் அனுபவங்களை, பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், நேச்சுரல் சலூன் அண்ட் ஸ்பா முதன்மை நிர்வாக அதிகாரிமற்றும் இணை நிறுவனர் சி.கே.குமாரவேல்,ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள எனர்ஜி கன்சல்டன்ட், தி டொண்ட்டீஸ் பிசினஸ் உரிமையாளர் லெனின் ஜேக்கப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இளம் தொழில்முனைவோர் பங்கேற்பு

12 வயதிலேயே கே’எஸ் கிசன் நிறுவனராக இருக்கும் கேசிகா மனோகர், 16 வயதிலேயே மைலாட் ஆஃப் டெவலப்பராக விளங்கும் ஆர்.ஜே.டி.கெளசல் ராஜ், 10 வயதிலேயே ஃபோர் சீசன் பாஸ்ட்ரி நிறுவனரான வினுஷா எம்கே, 11 வயதுடைய அமெரிக்காவிலிருக்கும் ரீசைக்கிள் மை பாட்டரி நிறுவனர் நிஹால் ஆகிய இளம் தொழில் முனைவோர் பங்கேற்று தங்களது வெற்றியின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வை 12 வயதான தி ஃபர்ஸ்ட்ஸ்டெப் நிறுவனர் ஹசினி ஒருங்கிணைக்கிறார். இதில் 7 முதல் 17 வயது வரையுள்ளஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். பங்கேற்பு கட்டணம் கிடையாது. இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/36-first-step.html என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 98412 44500 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிகழ்வை தமிழகம் முழுவதும் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளின் குழு, சென்னை கல்கி ரங்கநாதன் மான்ட்ஃபோர்ட் பள்ளி, லால்குடி சாய் வித்யாலயா, குடியாத்தம் ஆர்யா வித்யாஷ்ரம், திருப்பதி எடிஃபை இன்டர்நேஷனல் பள்ளி, திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி ஆகியவை ஒருங்கிணைந்து நடத்து கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x