Published : 16 Sep 2020 07:05 AM
Last Updated : 16 Sep 2020 07:05 AM

‘இந்து தமிழ் திசை’, ‘என்டிஆர்எஃப்’, FIITJEE இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: பொறியியல், மருத்துவம் குறித்த ஆலோசனை செப்.18-ல் தொடக்கம்

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து நடத்தும் ‘இன்ஸ்பைரோ’ எனும் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி செப்.18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதில், பல்வேறு துறைகளில் பொறியியல், மருத்துவ ஆய்வுகளின் எதிர்கால நோக்கம் மற்றும் மாணவர்கள், எதிர்காலத்துக்கு எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்ததகவல்களை மூத்த வல்லுநர்கள் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

முதல் நாளில் (செப்.18) சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநரும், NDRF தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் சக்கரபாளையம் எம்.மகாலிங்கம், ‘மருந்து ஆராய்ச்சி: கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

செப்.19 அன்று சென்னை டிஆர்டிஓ, காம்பாட் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) விஞ்ஞானியும் இயக்குநருமான டாக்டர் வி.பாலமுருகன், ‘காம்பாட் வாகனத்தின் ஆராய்ச்சி வாய்ப்புகள்’ எனும்தலைப்பிலும், செப்.20-ல் திருச்சிநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்டெக்னாலஜி முன்னாள் இயக்குநர்டாக்டர் சீனிவாசன் சுந்தர்ராஜன், ‘NITs: கல்வி மற்றும் ஆராய்ச்சிவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வு செப்.18 தொடங்கி, 4 வாரங்களுக்கு வெள்ளி, சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்நடைபெறும். 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். பங்கேற்பு கட்டணம் கிடையாது. ஆன்லைன் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x