Published : 12 Sep 2020 01:28 PM
Last Updated : 12 Sep 2020 01:28 PM

11, 12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள்: செப்.15 முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம்

மாணவர்கள் 11, 12-ம் வகுப்புத் துணைத் தேர்வுகளுக்கு: செப்.15-ம் தேதி பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''11, 12-ம் வகுப்பு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15.09.2020 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதே போன்று, 26.03.2020 அன்று நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியியல் , புவியியல் , கணக்குப் பதிவியல் (புதிய மற்றும் பழைய பாடத்திட்டம் ) மற்றும் தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் (பழைய பாடத்திட்டம்) பாடங்களுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுத ஏற்கனவே விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தற்போது செப்டம்பர் / அக்டோபர் 2020-ல் நடைபெறும் மேல்நிலை

முதலாம் ஆண்டு துணைத் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 15.09.2020 (செவ்வாய் 20 (செவ்வாய் 20 (செவ்வாய்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்ப எண் இல்லாத காரணத்தால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களைப் பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினைத் தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் ஹால் டிக்கெட் என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் / நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 அரியர்) மற்றும் இரண்டாமாண்டு (+2) துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

செப்டம்பர் / அக்டோபர் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x