Published : 10 Sep 2020 03:07 PM
Last Updated : 10 Sep 2020 03:07 PM

நீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி; ஆடைக் கட்டுப்பாடுகள் என்னென்ன?- தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) கரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), மாணவர்கள் எந்தெந்தப் பொருட்களைக் கொண்டு செல்லலாம், என்னென்ன ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பன குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் கொண்டுவர வேண்டியவை

* நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம்
* புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்)
* செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை
* 50 மில்லி அளவில் சானிடைசர்
* உட்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்
* முகக்கவசம்
* கையுறை
* மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்

ஆடைக் கட்டுப்பாடுகள்

* மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம்.
* ஷூ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி இல்லை.
* லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை.
* மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள், கட்டாயம் சோதனை செய்யப்படுவர். இதற்காக அவர்கள் சீக்கிரமாகவே தேர்வு அறைக்கு வரவேண்டியது அவசியம்.
* தேர்வின்போது குளறுபடிகளைத் தவிர்க்க, தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிதாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே மாணவர்கள் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம்.

இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x