Published : 08 Sep 2020 08:59 AM
Last Updated : 08 Sep 2020 08:59 AM

4-வது கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பு: ஆந்திராவில் 21-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

ஆந்திர அரசு 4-வது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் வரும் 21-ம் தேதி முதல் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 4வது கட்டஊரடங்கு தளர்வு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நேற்று ஆந்திர மாநில அரசு தனது ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அதற்கான நிபந்தனைகளை வெளியிட்டது. அதன்படி, வரும் 21-ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் முழுவதும் 9-ம்வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான அனைத்து அரசு, தனியார்பள்ளிகளையும் திறக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மேலும்,இண்டர்மீடியட் என்றழைக்கப்படும் பிளஸ்-1, பிளஸ் 2 ஜூனியர் கல்லூரிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அனுமதி வழங்கிய பிறகே பள்ளி, ஜூனியர் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும். இதேபோன்று, செப்டம்பர் 21-ம் தேதிமுதல் பட்டப்படிப்பு, பட்டமேற் படிப்பு, தொழிற்கல்வி கல்லூரிகளும் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும், 100 பேர் பங்கேற்கக் கூடிய அளவில்அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்தலாம்.

இதேபோன்று வரும் 21-ம்தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x