Published : 04 Sep 2020 07:18 AM
Last Updated : 04 Sep 2020 07:18 AM

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் ‘NEET-ஐ பிடிப்போம்’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி

‘இந்து தமிழ் திசை’, கல்வியா ளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் ‘NEET-ஐ பிடிப்போம்’ எனும் ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி செப். 6-ம் தேதி தொடங்கி,8, 10 ஆகிய 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

கரோனா ஊரடங்கு சில தளர்வுகளோடு விலக்கிக் கொள்ளப்பட்டு வரும் சூழலில் செப்.13-ம் தேதி நீட் தேர்வை எழுதவிருக்கும் மாணவ-மாணவிகளுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் சந்தேகங்களுக்கு விடை காணும் வகையில் இணையவழியிலான ‘NEET-ஐ பிடிப்போம்’ எனும் நிகழ்ச்சி எவ்வித கட்டணமும் இல்லாமல் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கி,8, 10 ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 10.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

வல்லுநர்கள் உரை

முதல் நாள் ‘இவ்ளோதான் இயற்பியல்’ எனும் தலைப்பிலும், 2-ம் நாள் ‘வெல்லும் வேதியியல்’ எனும் தலைப்பிலும், 3-ம் நாள்‘உற்சாக உயிரியல்’ எனும் தலைப்பிலும் அந்தந்த பாடத்துக்கான சிறப்பு வல்லுநர்கள் உரையாற்றஇருக்கிறார்கள். இந்நிகழ்வை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

நீட் தேர்வு குறித்த பயத்தைப் போக்கவும், பாடங்களை எவ்வாறு படிக்க வேண்டும், கேள்விகளை எவ்வாறு அணுக வேண்டும், தேர்வில் வெற்றி பெறுவது எவ்வாறு என்பது குறித்த மிகத் தெளிவான விளக்கங்களோடு இந்திய வருமானவரித் துறையின் கூடுதல் ஆணையர் நந்தகுமார், ஐஆர்எஸ். பயிற்சி தரவுள்ளார். இந்நிகழ்வை ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் ஒருங்கிணைக்கிறார்.

அனைவரும் பங்கேற்கலாம்

இந்த நிகழ்வில் பங்குபெறும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் வல்லுநர்கள் வழங்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/neet.php என்ற லிங்கில் பதிவு செய்துகொள்ளவும். நிகழ்வில் பங்கேற்பதற்கான Zoom ID – 708 121 0 121 (password – sigaram).

கூடுதல் தகவல்களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x