Published : 03 Sep 2020 07:52 AM
Last Updated : 03 Sep 2020 07:52 AM

எய்ம் - நீர் இணையம் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி: செப்.6-ம் தேதி ஆன்லைனில் நடக்கிறது

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நீர் வளம் காக்கும் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் எய்ம், நீர்இணையம் தொண்டு நிறுவனங்கள்இணைந்து நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடனான ஆன்லைன் கருத்துப் பகிர்வு செப்.6-ம் தேதி காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நீரின் தேவையை உணரும் வகையிலும், நீர் சேமிப்பு,நீர் பாசனம், நீர் நிலை பாதுகாப்புமுறைகளைப் பற்றிய சிந்தனைகளை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஹரியாணா, ராஜஸ்தான்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், இலங்கை, கனடா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 116 கட்டுரைகள் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டன.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றகட்டுரையாளர்களோடு, தேர்வுக்குழுவைச் சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற பொறியாளர் ஏ.நாகராசு, கே.டி.பெருமாள், யு.பூவலிங்கம், கே.ஆரோக்கியசாமி, ஜி.சசிதரன் ஆகியோர் ஆன்லைனில் பங்கேற்று, நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் தலைவராக டாக்டர் எம்.ஜி.அன்வர் பாஷா பங்கேற்று ஒருங்கிணைக்கிறார். இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான Zoom ID 845 1930 9263 (Password: 945 209). இந்த நிகழ்ச்சியின் மீடியாபார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x