Published : 28 Aug 2020 04:53 PM
Last Updated : 28 Aug 2020 04:53 PM

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு முதன்முறையாக தேசிய நல்லாசிரியர் விருது

டேராடூன் கால்சியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு (Eklavya Model Residential Schools - EMRS) சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. முதன் முறையாக தேசிய நல்லாசிரியர் விருது உத்தரகண்டில் டேராடூன் கால்சியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த சுதா பைனுளி என்கிற ஆசிரியைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத்துறை (முன்னதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாடு) இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர்களுக்கான தேசிய விருதை வழங்குவதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேசிய அளவிலான தனிப்பட்ட தேர்வுக்குழுவை அமைத்திருந்தது. இணையவழியில் வெளிப்படையாக நடைபெற்ற மூன்று கட்டத் தேர்வுக்குப் பிறகு 47 நல்லாசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த 47 பேரில் ஒருவராக ஆசிரியை சுதா பைனுளி இடம்பெற்றிருந்தார். ஏகலைவன் பிறந்தநாள் தோட்டம் அமைத்தல்; கல்வி குறித்த நாடகங்கள் நடத்துதல்; ஏகலைவன் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைத்தல்; வளர்ச்சிப் பணிமனைகள் நடத்துதல்; போன்ற பல புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தது அவரது சாதனைகளில் தனித்துவமாகும். கல்விக்கும் பழங்குடியின மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இடையேயான சமநிலையை உருவாக்கி மத்தியப் பழங்குடியின விவகாரங்களில் முயற்சிகளை சரியான திசையில் எடுத்துச் சென்றது, அவரது தொடர் சாதனையாகும்.

மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் .அர்ஜுன் முண்டா திருமதி சுதாவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். “உண்மையில் ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும் இது. ஏகலைவன் வரலாற்றில் ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். தேசிய விருதுக்காக திருமதி சுதா பைனுளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x