Published : 28 Aug 2020 08:05 AM
Last Updated : 28 Aug 2020 08:05 AM

நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு: மாணவர்கள் லிம்ரா மூலம் மாதிரித் தேர்வு எழுத வாய்ப்பு

நீட் நுழைவுத் தேர்வுக்கு வழிகாட்டி வரும் சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 1,34,714-ல் இருந்து 1,17,990 ஆகக் குறைந்தாலும், தேர்வு மையங்கள் 188-ல் இருந்து 238 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 22,784 மாணவர்கள் தேர்வு எழுத 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற இருந்தாலும், காலை 11 மணி முதலே மாணவர்கள் தேர்வு அறையினுள் அனுமதிக்கப்படுவார்கள். காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு, தேர்வு மையங்களில் தண்ணீர் வழங்கப்பட மாட்டாது. மாணவர்கள் தேர்வு அறையினுள் தண்ணீரைத் தெளிவாகக் காட்டும் பாட்டில்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் கையுறை, முகக்கவசம், சிறிய பாட்டில் கிருமிநாசினி மற்றும் தேர்வு சார்ந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்.

நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கூறும்போது, “லிம்ரா நிறுவனம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ராஜஸ்தான் நீட் பயிற்சி நிறுவனமான ‘கேரியர் பாய்ண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து கட்டணம் இல்லாமல் மாதிரி தேர்வு எழுதும் வாய்ப்பைத் தருகிறது.

‘கேரியர் பாய்ண்ட்’ நிறுவனம் நாளை (ஆக.29) இணையத்தில் மாதிரித் தேர்வை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்கு, லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம் அவர்களுக்கான கட்டணத்தைத் தானே செலுத்தி அனுமதி பெற்று தருகிறது.

தொடர்பு எண்கள்

இதில் விருப்பமுள்ளவர்கள், தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மொபைல் எண், நீட் தேர்வு பதிவெண் ஆகியவற்றை 9444048111/ 9952922333/ 9976300300 ஆகிய எண்களுக்கு அனுப்பினால், மாணவர்கள் மொபைல் போனில் பதிவு செய்ய வேண்டிய செயலி, தேர்வு எழுதும் முறை குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x